கடந்த 26 ஆண்டுகளில், லஞ்ச ஊழல் மற்றும் பணக் கசிவுகளினால் 4.5 டிரில்லியன் வெள்ளி இழைப்பை நாடு சுமப்பதற்கு காரணமாக இருக்கும் நபர்களை கண்டறியும்படி, 4 ஏஜென்சிகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், வருமான வரி வாரியம், பேங்க் நெகாரா மலேசியா மற்றும் அரச மலேசிய போலீஸ் படை ஆகிய ஏஜென்சிகள், இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். அரசியல், இனம் மற்றும் மத வேற்றுமையின்று அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


