இந்தியாவின் மிகப்பெரிய கரன்சி நோட்டான 2 ஆயிரம் ரூபாய், செல்லத்தக்க நோட்டாக மாற்றிக்கொள்வதற்கு இந்தியாவின் மத்திய வங்கி நிர்ணயித்த இருந்த காலக்கெடு நாளை செப்டம்பர் 30 ஆம்தேதியுடன் முடிவடைகிறது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் பண நோட்டு புழக்கத்திலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்ளப்படுகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு இந்திய நிர்ணயித்துள்ள காலகெடு முடிவடைவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் 92 விழுக்காடு பணம் வெற்றிக்கரமாக மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய வங்கியான தீ ரிவெர்ஸ் பேன்க் ஒஃப் இந்தியா அறிவித்துள்ளது. இன்னும் 8 விழுக்காடு நோட்டுகள் மட்டுமே வெளியில் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்களுக்கு அந்தப் பணத்தை மாற்றும் நடவடிக்கையில் உதவி வரும் பிரபல சுற்றுலா பயண நிறுவனமான கிள்ளான் கேபிஎஸ் ட்ரேவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேபிஎஸ் சாமி கூறுகையில் இந்தியாவின் 2 ஆயிரம் ருபாய் நோட்டுகளை மாற்றுவதில் கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கும் முடிந்தளவில் நிறுவனம் உதவியிருப்பதாக குறிப்பிட்டார்.இன்று இரவு வரை மட்டுமே இந்தகைய உதவிகளை தங்களால் வழங்க முடியும் என்றார் கே.பி.சாமி.








