Oct 13, 2026
Thisaigal NewsYouTube

தேசிய பதிவு இலாகாவிற்கு எதிராக மாது வழக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய பதிவு இலாகாவிற்கு எதிராக மாது வழக்கு

கோலாலம்பூர், மார்ச்.17-

தனது இரு பிள்ளைகளின் மைகாட் அட்டையிலும் இஸ்லாம் சமயத்தவர் என்ற வார்த்தையை அகற்ற மறுப்பதாகக் கூறப்படும் தேசிய பதிவு இலாகாவிற்கு எதிராக இந்து மாது ஒருவர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தாம் ஒரு முஸ்லீம் அல்லர் என்பதை கடந்த 2017 ஆம் ஆம் ஆண்டு கோலாலம்பூர் ஷரியா உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக அவ்விரு குழந்தைகளும் பிறந்ததாக அந்த மாது குறிப்பிட்டுள்ளார்.

2009 மற்றும் 2012 இல் பிறந்த தனது இரு குழந்தைகளும் முஸ்லிம் என்று அவர்களின் மைகாட் அட்டையில் உள்ளது. ஆனால், தாம் முஸ்லிம் அல்ல என்று ஷரியா உயர் நீதிமன்றம் வழங்கிய சான்றிதழை, தேசிய பதிவு இலாகாவில் சமர்ப்பித்தும், அதனை ஏற்றுக் கொள்ள அவ்விலாகா மறுப்பதாக மூவாரில் பிறந்தவரான 47 வயதுடைய அந்த மாது தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரே இரண்டு ஆண்டுகள் கழித்து ஓர் இந்து நபரை தாம் மணந்து கொண்டதாகவும், தாய், தந்தை இருவருமே இந்துவாக இருக்கும் பட்சத்தில் இரு பிள்ளைகளின் முஸ்லிம் சமய அந்தஸ்தை மாற்றுவதற்கு JPN மறுப்பது ஏன் என்று அந்த மாது கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்