அரசாங்க இலாகாக்கள், ஏஜென்சிகள், அலுவலகங்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் மலாய்மொழில் இருப்பது ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால், மலாய் மொழியில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று சிறு, நடுத்ததர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தேசிய மொழி மலாய் ஆகும். அதற்குரிய முக்கியத்துவத்தையும், முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் கட்டாயமாக மலாய் மொழியில்தான் இருக்க வேண்டும் என்று வலிந்து திணிக்கக்கூடாது என்று அந்த சங்கத்தின் தலைவர் வில்லியன் எங் கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய வர்த்தக சந்தையில் மலேசிய நுழைய வேண்டும், வர்த்தகத்தை விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்ற அதிகமாக கோரிக்கை விடுக்கும் நாம், மலாய் மொழி பயன்பாட்டு விவகாரத்தில் அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பது வர்த்தகத்துறையில் எதிர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்று வில்லியன் எங் நினைவுறுத்துகிறார்.








