Oct 8, 2026
Thisaigal NewsYouTube

நீச்சல் குளத்தில் மூழ்கிய 7 வயது சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நீச்சல் குளத்தில் மூழ்கிய 7 வயது சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான்

மலாக்கா, ஜூலை.20-

7 வயது சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினான்.

அந்தச் சிறுவன் காப்பாற்றப்பட்ட போதிலும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி தற்போது மலாக்கா சிறார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலையில் மலாக்கா, கோத்தா லக்சமனா, தாமான் கோத்தா ஷாபண்டாரில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நிகழ்ந்தது.

குடும்பத்தினருடன் அடுக்குமாடி ஹோம்ஸ்டேய் வீட்டில் தங்கியிருந்த அந்தச் சிறுவன், அந்த வீடமைப்புப் பகுதியில் உள்ள நீச்சள் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வே ஹீ தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →