ஈப்போ, புந்தோங் பகுதியில் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு இப்பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்துத் தகவல் கிடைத்துச் சென்ற போலீசார், சாலையில் காயங்களுடன் கிடந்த ஒருவரின் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், அவர் தனது நண்பர்களுடன் கார் வாடகைக்கு விடும் இடத்தில் இருந்தபோது, அரிவாளுடன் வந்த ஒரு கும்பல் திடீரெனத் தாக்கியது தெரியவந்தது.
இதில் அவரது நண்பர்கள் சிலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ஒரு உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற சந்தேக நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வரும் வேளையில், இந்த வழக்கு கொலை மற்றும் ஆயுதங்களுடன் கலவரம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.








