கூச்சிங், ஜூலை.21-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, ஏரியில் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் சரவாக் மலேசிய பல்கலைக்கழகத்தின் சாலை வட்டம் அருகில் நிகழ்ந்தது. 50 வயது நூர் ஷாரிஃபா லுசியா அப்துல்லா என்பவரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது. காரில் இருந்த அவரின் 17 வயது மகள் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
டேசா இல்முவைச் சேர்ந்த அந்த மாது முவாரா துவாங் இடைநிலைப்பள்ளிக்குத் தனது மகளுடன் காரில் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








