Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவன் உயிரிழப்பு, திடீர் மரணமாகும்
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவன் உயிரிழப்பு, திடீர் மரணமாகும்

Share:

பேரா, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் கடந்த ஜுன் 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் மிகவும் சுகவீனப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட அதேவேளையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமுற்றதாக தாங்கள் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

முதல் நாள் பள்ளிக்கு வரும் போது அந்த மாணவன் கைத்தடியை தாங்களாக பிடித்துக்கொண்டு வந்ததாக பள்ளி நிரவாகத்தினர் தெரிவித்துள்ளனர் என்று ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்தார்.

Related News