Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு

Share:

பட்டர்வொர்த் , ஜூலை 15-

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 96 ஆயிரத்து 780 வெள்ளி மதிப்புள்ள நிறுவன சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர், பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்ட கமாருஸ்ஸமான் கமாலுதீன் என்ற 51 வயதுடைய அந்த முன்னாள் இயக்குநருக்கு எதிராக மொத்தம் நான்கு மோசடி குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Syarikat Northern Petrochem Sdn. Bhd. நிறுவனத்தின் இயக்குநராக கமாருஸ்ஸமான் கமாலுதீன் பொறுப்பில் இருந்த போது, Syarikat Natureceuticals Sdn. Bhd. என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பினாங்கு, Taman இந்தரவாசி, பேரை, Am Bank உட்பட நான்கு வெவ்வேறு பகுதிகளில் கமாருஸ்ஸமான் கமாலுதீன் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 6 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கமாருஸ்ஸமான் கமாலுதீன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்