Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 16.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 164 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 16.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 164 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.11

கிள்ளான் பள்ளத்தாக்கில், இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை முடக்கிய போலீசார் அவர்களிடமிருந்து 16.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, 164 கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் ஷாஸெலி காஹார் கூறுகையில், இச்சம்பவத்தில் 18 முதல் 47 வயதுடைய 5 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் 5 பேரும் பந்திங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 2 மற்றும் கோலாலம்பூர் என வெவ்வேறு இடங்களில் பிடிபட்டதாகவும் ஷாஸெலி காஹார் குறிப்பிட்டுள்ளார்.

Related News