May 5, 2026
Thisaigal NewsYouTube
வலுவான பொருளாதாரத் தரவுகளால் மலேசிய ரிங்கிட் தொடர்ந்து ஏற்றம்
தற்போதைய செய்திகள்

வலுவான பொருளாதாரத் தரவுகளால் மலேசிய ரிங்கிட் தொடர்ந்து ஏற்றம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.11-

மலேசியாவின் உள்நாட்டு பொருளாதாரக் குறிகாட்டிகள் சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக 0.25 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு 3 ரிங்கிட் 91 சென்னாக வலுவடைந்துள்ளது. இது நேற்று மாலை இருந்த 3 ரிங்கிட் 92 சென் என்ற நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

இந்த வளர்ச்சி குறித்து பேங்க் முவாமாலாட் தலைமைப் பொருளாதார நிபுணர் Afzanizam Abdul Rashid கூறுகையில், 2025-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் கட்டுமானத் துறை 10.3 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது ரிங்கிட்டின் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துறை தொடர்ந்து எட்டாவது காலாண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News