Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு

Share:

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஷா ஆலம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த வர்த்தகர் எஸ். தனபாலனின் மரணத்தில் போலீஸ் துறையின் அலட்சியப் போக்கே காரணமாகும் என்று அப்பீல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு கூட்டரசு நீதிமன்றத்தின் அனுமதியை அரசு தரப்பு கோரியுள்ளது.

போலீசாரின் அலட்சியப் போக்கினால் தனபாலனின் மரணம் விளைந்தது என்று மரண விசாரணை நீதிபதி தெரிவித்த முடிவை, சிவில் நீதிமன்றம் முழுக்க முழுக்க சார்ந்து இருக்க முடியுமா? அல்லது அந்த முடிவை சார்ந்து தீர்ப்பளிக்க இயலுமா? என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தமது வாதத்தை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோத அமைப்பில் அங்கத்துவம் பெற்று இருப்பதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட தனபாலன் கடந்த 2018 ஆம் ஆண்டு மரணம் அடைந்தது தொடர்பில் அவரின் துணைவியார் வி. சாந்தி மற்றும் அவரின் தந்தை பி. வத்தியன் ஆகியோர் போலீஸ் துறை மற்றும் அரசாங்கத்தற்கு எதிராக தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அப்பீல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு மேற்கண்ட முக்கிய கேள்வியை அரசு தரப்பு, கூட்டரசு நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

Related News