Oct 7, 2026
Thisaigal NewsYouTube

மோசமடையும் புகைமூட்ட நிலை - ஒரே இரவில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
 மோசமடையும் புகைமூட்ட நிலை - ஒரே இரவில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

நாட்டில் புகைமூட்ட நிலை ஒரே இரவில் மேலும் மோசமடைந்துள்ளது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய தீபகற்பப் பகுதிகளில் 33 இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.

சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியா பகுதியில் காற்று மாசு குறியீடு 191 ஆக பதிவாகி, நாட்டிலேயே அதிகபட்ச அளவை எட்டியது.

இதைத் தொடர்ந்து கோலாலம்பூரின் செராஸ் மற்றும் நெகிரி செம்பிலானின் நீலாய் ஆகிய பகுதிகளில் தலா 189 என்ற அளவில் ஏபிஐ பதிவானது.

அதேவேளையில், ஜோகூர் மாநிலமும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

பத்து பஹாட்டில் 188, செகாமட்டில் 177, பாசீர் கூடாங்கில் 174, தங்காக்கில் 169, லார்கினில் 167, பெங்கெராங்கில் 165, கோத்தா திங்கியில் 164 மற்றும் குளுவாங்கில் 161 என்ற அளவில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.

மேலும், நெகிரி செம்பிலான், மலாக்கா, பேராக், திரெங்காணு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலேயே பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
குவாந்தானில் 19 வயது பாலிடெக்னிக் மாணவி மரணம்: பொறாமையே காரணம் என போலீசார் தகவல்

குவாந்தானில் 19 வயது பாலிடெக்னிக் மாணவி மரணம்: பொறாமையே காரணம் என போலீசார் தகவல்

வீட்டுக் காவல் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சர் தகவல்

வீட்டுக் காவல் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சர் தகவல்

லாவோஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ போதைப்பொருள் மலேசியாவில் இருந்து வரவில்லை - புக்கிட் அமான் உறுதி

லாவோஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ போதைப்பொருள் மலேசியாவில் இருந்து வரவில்லை - புக்கிட் அமான் உறுதி

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்