கேமரன்மலை சாலையில் தனது காரை பின்தொடர்ந்து வந்த பெண் வாகனமோட்டியிடம் அடாவடித்தனம் புரிந்து அவரை தாக்கிய ஆடவருக்கு தாப்பா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 7 நாள் சிறைத் தண்டனை விதித்தது.
29 வயதுடைய ஸாயிம் ஃபாயிஸ் தர்ஸிமி என்ற அந்த ஆடவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த ஜுன் 5 ஆம் தேதி மாலை 5.33 மணியளவில் ஜாலான் தாப்பா - கேமரன் மலை சாலையின் 22 ஆவது கிலோமீட்டரில் லத்தா இஸ்கண்டார் நீர் வீழ்ச்சிக்கு அருகில் பிரதான சாலையில் பெண் வாகனமோட்டியான 24 வயதுடைய அமீரா அதிகா ஷரிஸான் என்பவரின் காரை மடக்கி கடுமையாக திட்டியதுடன் அப்பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன் அவரின் நெற்றியில் அடித்தாக செர்டாங்கில் ஒரு தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் ஸாயிம் ஃபாயிஸ் தர்ஸிமி குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. தனக்கு எதிரான குற்றத்திற்கு தண்டனையை குறைக்குமாறு அந்த நபர் செய்து கொண்ட முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது.
அந்தப் பெண்ணின் காரை மடக்கி, அந்த நபர் தாக்கும் காட்சியைக்கொண்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள்
கேமரன்மலை சாலையில் பெண் வாகனமோட்டியிடம் அடாவடித்தனம் புரிந்த ஆடவருக்கு 7 நாள் சிறை
Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


