கோலாலம்பூர், அக்டோபர்.27-
அபாயகரமான பின்னணியைக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் புதிய APSS குடிநுழைவு முறை வரும் டிசம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சூல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
இந்த முறையின் மூலம், அது போன்ற வெளிநாட்டுப் பயணிகள் நாட்டிற்குள் வரும் முன்பே, அவர்களின் பின்னணி மற்றும் அபாய மதிப்பீட்டைக் கணிக்க முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஷாம்சூல் அனுவார் குறிப்பிட்டுள்ளார் .
இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டிற்குள் அச்சுறுத்தல் இல்லாத வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியா வழங்கும் நீண்ட கால விசாக்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இம்முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் ஷாம்சூல் அனுவார் குறிப்பிட்டுள்ளார்.








