குவா மூசாங், ஜனவரி.13-
இன்று நண்பகல் சுமார் ஒரு மணியளவில் குவா மூசாங் - கோலா கிராய் சாலையில் உள்ள கம்போங் பாலோவில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிய பயங்கர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இதர மூவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.
இந்த விபத்தில் சிக்கிய மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் ஒரு பெண் உட்பட மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவசர அழைப்பு பெறப்பட்டதையடுத்து, குவா மூசாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மதியம் 1.43 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டெடுத்தனர் என்று அதன் கமாண்டர் சே ராஸாக் ஹருன் தெரிவித்தார்.








