Oct 8, 2026
Thisaigal NewsYouTube

4.8 மில்லியன் ரிங்கிட் வரி உடன்பாட்டை ரத்து செய்த வருமான வாரியம் – முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் நீதிமன்றத்தில் சவால்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
4.8 மில்லியன் ரிங்கிட் வரி உடன்பாட்டை ரத்து செய்த வருமான வாரியம்  – முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் நீதிமன்றத்தில் சவால்

முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம், தமக்கும், வருமான வரி வாரியத்திற்கும் இடையே ஏற்பட்ட 4.8 மில்லியன் ரிங்கிட் வரி உடன்பாட்டை ரத்து செய்த அந்த வாரியத்தன் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

2022 பிப்ரவரி 9-ஆம் தேதி செய்யப்பட்ட உடன்பாட்டையும், 2011 முதல் 2020 வரையிலான வரி ஆண்டுகளுக்கான 2022 மார்ச் 22-ஆம் தேதியிட்ட ஒருங்கிணைந்த வரி மதிப்பீட்டையும் ரத்து செய்த வருமான வரி வாரியத்தின் முடிவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டத்துறை அலுவலகம், வருமான வரி வாரியம், இதுவரை புதிய வரி மதிப்பீட்டையோ அல்லது கூடுதல் வரித் தொகையையோ நிர்ணயிக்காத நிலையில், மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டது.

ஆனால் அஸீஸின் வழக்கறிஞர் நிக்கோலஸ் மார்க் பெரேரா, 1967 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உடன்பாடு மற்றும் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த வரி மதிப்பீடு இறுதியானது என்பதால், அதை வருமான வரி வாரியம் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் நவம்பர் 11-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். இந்திரா நேரு அறிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →