May 5, 2026
Thisaigal NewsYouTube
டோல் கட்டணச் சலுகை: மலேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

டோல் கட்டணச் சலுகை: மலேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.15-

சீனப் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் அறிவித்த 50 விழுக்காடு டோல் கட்டணச் சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையிலும் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் பல பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோப்பேங், சிம்பாங் பூலாய், மெனோரா சுரங்கப்பாதை போன்ற முக்கிய வழித்தடங்களில் வாகனங்கள் மெதுவாக நகர்வதாகவும், விபத்துக்கள் காரணமாக சில இடங்களில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது. சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதால் நள்ளிரவு வரை வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News