நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் 78 ஆவது பொதுப் பேரவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய உரை, மலேசியாவின் பெயரை உலக அரங்கில் மீண்டும் மணக்க செய்துள்ளதாக அமெரிக்காவிற்கான மலேசியத் தூதரர் டத்தோ செரி முஹமாட் செரி முஹமாட் நஸ்ரி அப்துல் அசிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தீண்டல் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வாரின் உறுதிமிக்க, துணிச்சல் நிறைந்த உரை அதிகமான நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக நஸ்ரி தெரிவித்தார்.
குறிப்பாக, பாஸ்தீன விவகாரத்தில் ஐ.நாவின் வஞ்சகமிகுந்த, இரட்டைப் போக்கு நிலைப்பாட்டை அன்வார் துணிந்து சாடினார். அன்வாரின் இந்த சாடல் பல நாடுகளின் கவன ஈர்ப்பாக அமைந்ததுடன் அவரை பலர் பாராட்டியதாக நஸ்ரி குறிப்பிட்டார்.








