கைப்பேசியில் 169 ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு அம்பாங் மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆறாயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான 30 வயதுடைய மஸ்லான் ஃபிர்டானி மர்சுக்கிக்கு எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் அமாலீனா பசீரா முன்னிலையில் வாசிக்கப்பட்ட வேளையில், அவர் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு அத்தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி, காலை 10.45 மணியளவில், அம்பாங், ஜாலான் இண்டா, தாமன் அம்பாங் இண்டாவில் உள்ள ஒரு வீட்டில், சம்சோங் கேலக்ஸி கைபேசியில் 92 படங்கள் மற்றும் 77 ஆபாச வீடியோ உள்ளடக்கங்களை வைத்திருந்ததற்காக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


