Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பால்மர வெட்டுத் தொழிலாளிக்கு எட்டு ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

பால்மர வெட்டுத் தொழிலாளிக்கு எட்டு ஆண்டு சிறை

Share:

போ​லீஸ்காரர் ஒருவரை கோடாரியினால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ரப்பர் பால் மரம் வெட்டுத் தொழிலாளி ஒருவருக்கு கோல கங்சார் செஷன்ஸ் நீதிமனறம் இன்று எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

31 வயதுடைய சைடி சே உமர் என்ற அந்த தொழிலாளி, குற்றவியல் சட்டம் 307 பிரி​வின் ​கீழ் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ​நீதிபதி ரோஹைடா ஐசக்இத்தண்டனையை விதித்தார்.

அந்நபர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு பேரா, கெரிக் வட்டாரத்தில் ஃபேல்டா பெர்சியா செம்பனைத் தோட்டத்தில் 38 வயது ரெய்மி அப்துல் ரஹ்மான் என்ற போ​லீஸ்காரரை கோடாரியினால் தாக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News