கோலாலம்பூர், செப்டம்பர்.09-
பல சிக்கலான குற்றச் செயல்களைக் கண்டறிவதற்காக, தடயவியல் துறையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது புக்கிட் அமான்.
இது குறித்து தேசிய காவல்படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை கூறுகையில், தங்களிடம் அதிநவீன தடயவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இருந்தாலும் கூட, தற்போதுள்ள ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புக்கிட் அமானும் தனது வசதியை மேம்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய குற்றவாளிகளைக் கையாள்வதற்கு இது போன்ற ஏஐ தொழில்நுட்ப வசதிகள் தடயவியல் துறைக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








