Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார்
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார்

Share:

எல்மினா விமான விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களில் மின்-ஹைலிங் வாகன மோட்டியின் குடும்பத்தினரை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விமான விபத்தின் போது தரையில் இருந்த மின்-ஹைலிங் வாகன மோட்டியான 53 வயதுடைய ஷரிபுதீன் ஷாரி உயிரிழந்தார்.

தமன் தேச விஸ்டா, நியூ டவுன் சலாக் டிங்கி -யிலுள்ள அவரின் இல்லதிற்கு நேரில் சென்ற அந்தோணி லோக், குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.

Related News