கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
அரசாங்கக் கொள்கைகளை விமர்சித்துப் பேசியதற்காக, கடந்த ஆண்டு 27 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். பொதுச் சேவையின் நடத்தை, ஒழுங்குமுறை விதிகள் 1993 பிரிவு 19-இன் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கட்டுப்பாடற்றப் பொது அறிக்கைகள், குறிப்பாகத் தவறான தரவுகளுடன் வரும் அறிக்கைகள், தேவையற்ற பொது அமைதியின்மையைக் கூட ஏற்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளைப் பின்பற்றுவதை உறுதிச் செய்ய, தற்போதுள்ள விதிகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.








