Oct 9, 2026
Thisaigal NewsYouTube

உள்ளூர்வாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தால், சிஎல்கியூ அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உள்ளூர்வாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தால், சிஎல்கியூ அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.22-

அண்மையில், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், சம்மிட் தங்கும் விடுதியில் ஏற்பட்ட கலவரத்தை மனிதவள அமைச்சு தீவிரமாகக் கருதுகிறது. அந்த தங்கும் 2027 வரை தொழிலாளர் தங்குமிடமாகச் செயல்பட செல்லுபடியாகும் உரிமத்தைக் கொண்டிருந்தாலும், உள்ளூர்வாசிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் அதன் உரிமத்தை இரத்து செய்ய ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிச் செய்ய சிஎல்கியூக்கள் முக்கியம் என்றாலும், அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்கும் பொறுப்பு அவற்றின் நிர்வாகத்திற்கு உண்டு. விதிமுறைகளை மீறினால், 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் அமைச்சு இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் இணைந்து முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஸ்டீவன் சிம் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →