Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மது போதையில் மாது உட்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

மது போதையில் மாது உட்பட நால்வர் கைது

Share:

மது போதையில் செல்லும் வாகனமோட்டிகளுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிரதான சாலைகளில் போலீசார் மேற்கொண்ட ஒப்ஸ் அல்கோஹொல் சோதனை நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகுதியாக போதையில் திளைத்து இருந்ததாக அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் பக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
அதேவேளையில் இதர குற்றங்களுக்காக 12 வாகனமோட்டிகளுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News