Oct 15, 2026
Thisaigal NewsYouTube

தங்கத்தேரின் பவனியைக் கண்காணிக்க மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பிப்ரவரி, 02-

பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் டிஜிட்டல் பினாங்கும் இணைந்து, தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் தங்கத் தேரின் பவனியை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்படும் இந்த அமைப்பு , முந்தைய ஆண்டை விட மிகத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைத் திட்டமிட்டு, சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தி, முக்கியமான தருணங்களைத் தவறவிடாமல் இருக்க முடியும்.

இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு, பக்தர்கள் தங்கள் கைப்பேசிகள் மூலமாகவே தேரின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள உதவுகிறது. இதனால், அவர்கள் தேரை வரவேற்கவும், வழிபடவும் சரியான நேரத்தை கணிக்க முடியும். குறிப்பாக, பவனி செல்லும் பாதையில் உள்ள பல்வேறு கோயில்களிலும், முக்கிய இடங்களிலும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளையும்,ளர்ச்சனைகளையும் சிறப்பாக மேற்கொள்ள இந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது என அவ்வாரியம் குறிப்பிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் தைப்பூசத் திருவிழாவில், இந்த டிஜிட்டல் கண்காணிப்பு முறை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட , ஆன்மீக நிலையிலான, நிறைவான அனுபவத்தை உறுதி செய்கிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பாரம்பரியத்துடன் இணைத்து, பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, புனிதப் பயணத்தின் தெய்வீகத் தருணங்களை யாரும் தவறவிடாமல் இருக்க இந்த முயற்சி உதவுகிறது என அவ்வாரியம் மேலும் குறிப்பிட்டது

https://pantau.digitalpenang.my எனும் இணையப்பக்கத்தின் வாயிலாக பொது மக்கள் தங்கத்தேரின் பவனி குறித்த விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்