Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்தனர்
தற்போதைய செய்திகள்

கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்தனர்

Share:

அண்மையில் கிள்ளான் , தாமான் சி லியுங் வீடமைப்புப்பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த வயதான கணவன் மனைவியை பாராங் முனையில் கொள்ளையிட்டதாக நம்பப்படும் ஆயுதமேந்திய கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி போலீசார் தகவல் பெற்றதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இக்கொள்ளைச் சம்பவத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 61 வயது தம்பதியரிடம் ரொக்கப்பணத்தையும் ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளர்.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 4.15 மணியளவில் சிலாங்கூர் கடுங் குற்றத் தடுப்பு பிரிவான டி9 னைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று, கிள்ளான் ஜாலான் ஹாங் ஹுவாட் டில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய திடீர் சோதனையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் என்று நம்பப்படும் ஏழு பேரை கைது செய்துள்ளனர் என்று ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

39 வயது மோகன் ராஜ் மூக்கையா என்ற சினி கண்ணா, 51 வயது ரவிச்சந்தின் ராமகிருஷ்ணன் என்ற பழத்தோட்டம் ரவி மற்றும் 44 வயது லெட்சுமணன் சங்கரன் என்ற லாச்சி ஆகிய மூவரை போலீசார் தேடி வருவதாக ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்தனர் | Thisaigal News