Dec 5, 2025
Thisaigal NewsYouTube
போலி வெடிகுண்டு மிரட்டல் - இண்டர்போல், எஃப்.பி.ஐ. உதவியைக் காவல் துறை நாடும்
தற்போதைய செய்திகள்

போலி வெடிகுண்டு மிரட்டல் - இண்டர்போல், எஃப்.பி.ஐ. உதவியைக் காவல் துறை நாடும்

Share:

கூட்டரசு விசாரணை பிரிவான ஃப்பிஐ, அனைத்துலகக் காவல் துறையான இன்டர்போல் ஆகியவற்றுடன் இணைந்து பள்ளிக் கூடங்களில் விடுக்கப்பட்டிருக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநர் டத்தோ முஹமாட் ஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், அந்த மிரட்டலுக்கான நோக்கம் குறித்தும் அனுப்பியவர் யார் என்பதை அறியவும் Jamaica, Trinidad, Tobago ஆகிய நாடுகளின் உதவியோடும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

பெறப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் 'beeble.com' எனும் இணையப் பக்கத்தில் இருந்து வந்துள்ளதாகவும் அனுப்பியவர் பெயராக 'Taktstorer' எனக் குறிப்பிடப்பட்டதாகக் கூறும் முஹமாட் ஷுஹைலி அச்சொல் ஜெர்மானிய மொழி எனவும் அமைதியை நிலை குலைப்பவர் என்னப் பொருள் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இதே போன்ற வெடிகுண்டு முரட்டல் ஜமாய்க்கா நாட்டில் சில பள்ளிகளுக்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி விடுக்கப்பட்டிருந்ததாக முஹமாட் ஷுஹைலி கூறினார்.

இவ்விவகாரம் குறித்து நாடு முழுவதும் 51 புகார்கள் பெற்றிருக்கும் நிலையில், 10 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்