Apr 9, 2026
Thisaigal NewsYouTube
எண்ணெய் விலை உயர்வு: அப்துல் ஹாடியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – ஃபஹ்மி ஃபாட்சில் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எண்ணெய் விலை உயர்வு: அப்துல் ஹாடியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – ஃபஹ்மி ஃபாட்சில் கூறுகிறார்

Share:

எண்ணெய் விலையை உயர்த்துவதற்கு முறையான காரணங்கள் இல்லை என்ற பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடியின் கூற்றை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவே இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு சிற்றரசு போன்ற பெரும் எண்ணெய் உற்பத்தி நாடுகளே சந்தைச் சமநிலையைப் பேண விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஹாடியின் வாதம் அர்த்தமற்றது என டத்தோ பாஹ்மி குறிப்பிட்டார்.

ஈரான் மீதான தடைகளுக்கும் மலேசியாவிற்கும் தொடர்பில்லை என்பதால் எண்ணெய் விலை உயர்வு தேவையற்றது என ஹாடி முன்னதாகக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த டத்தோ ஃபஹ்மி, கடந்த வாரம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் இது குறித்து விளக்கமளிக்கப்பட்ட போது கேள்வி எழுப்பாத ஹாடி, இப்போது அரசியல் செய்வது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளை விட மலேசியாவில் டீசல் விலை இன்னும் குறைவாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News