அலோர் ஸ்டார், அக்டோபர்.26-
கெடா மாநிலத்தில் வெள்ளம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் இருந்த 10 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் மூடப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 381 குடும்பங்களைச் சேர்ந்த 1,335 பேராகக் குறைந்துள்ளது என கெடா மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
குபாங் பாசு, பெண்டாங், பொகோக் செனா, பாடாங் தெராப், கூலிம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்னும் ஒன்பது தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீதமுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.








