Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியருக்கு 5,800 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆசிரியருக்கு 5,800 வெள்ளி அபராதம்

Share:

முவார்,ஜன.9
மாணவனின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியருக்கு இன்று மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் 5,800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

43 வயதுடைய முஹமாட் நோர் ஃபஸ்லி ரஷிட்டிற்கு மாஜிஸ்ட்ரெட் ஃபத்தின் டலிலா காலிட் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 18 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் பொந்தியான்னிலிருந்து பண்டாருக்கு செல்லும் வழியில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதால் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த மாணவன் மீது மோதப்பட்டதாக முஹமாட் நோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் 18 வயதுடைய மாணவன் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரியவந்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்