கோலாலம்பூர், ஜூலை.31-
வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று அதிகாலை 6.30 மணியளவில் டிரம்புடன், தாம் தொலைபேசியில் உரையாடிய போது அவரது வருகை உறுதிச் செய்யப்பட்டதாக ஆசியான் தலைவரான பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 13வது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பு பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.








