கோலாலம்பூர், தாமான் கெராமாட் பகுதியில் கெத்தும் நீர் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு போலீஸ்காரர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணியளவில், புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கத்துறையின் உளவுப் பிரிவு மற்றும் அம்பாங் ஜெயா மாவட்ட போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட எட்டு போலீஸ் உறுப்பினர்களில் ஏழு பேர் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என்றும், மற்றொருவர் பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களுடன் ஓர் ஆடவரும் கைது செய்யப்பட்டார். அனைவரும் உலு கிள்ளான் போலீஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புக்கிட் அமான் இயக்குநர் டத்தோ அய்டா அப்துல் ஹாமிட், இந்த கைது நடவடிக்கையைப் உறுதிப்படுத்தினார்.








