Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் ஓட்டுநர் பிடிப்பட்டார்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் ஓட்டுநர் பிடிப்பட்டார்

Share:

பூச்சோங் அருகிலுள்ள லெபோராயா பெஸ்ராயாவில் நான்கு பேர் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய 21 வயதுடைய Ford Ranger வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று, மதியம் 12:29 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 30 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியும் அவரின் மகனும் பலத்த காயங்களுக்கு உட்பட்ட வேளையில் மனைவியும் மற்றொரு பிள்ளையும் காயமின்றி தப்பியதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க துறையின் தலைவர் ஏசிபி சரிஃபுடின் முஹமாட் சாலெ தெரிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த காணொளியில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Ford Ranger ஓட்டுநரின் கவனக்குறைவினாலும் அலட்சிய போக்கினாலும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ஏசிபி சரிஃபுடின் கூறினார்.

Related News