Jul 31, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை மாமன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை மாமன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12-

ஜோகூர் நீரிணையில் வீற்றிருக்கும் பத்து புத்தே தீவு உட்பட மூன்று தீவுகளின் இறையாண்மை தொடர்பாக நடத்தப்பட்ட அரச விசாரணையின் அறிக்கை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் -மிடம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், அரச விசாரணைக்கு தலைமையேற்ற வருமான துன் முகமது ராஸ் ஷெரீப் தலைமையில் இதர விசாரணை ஆணையர்களுடன் இணைந்து அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இறையாண்மை விவகாரத்தில் பத்து புத்தே- தீவுடன் இணைந்து பட்டுவான் தெங்கா மற்றும் துபீர் செளதன் ஆகிய தீவுகளும் சம்பந்தப்பட்டு இருந்தன.

பவளப்பாறை தீவான பத்து புத்தே, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று கடந்த 2008 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பைத் தொடர்ந்து பத்து புத்தே உட்பட இதர தீவுகளின் அரசுரிமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை