Oct 18, 2026
Thisaigal NewsYouTube

காருடன் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காருடன் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி பலி

கூலாய், செப்டம்பர் 18-

காருடன் மோதியதில், மோட்டார் சைக்கிளுடன் தூக்கி எறியப்பட்ட ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.41 மணியளவில் ஜோகூர்,ஜாலான் கூலாய் – கோட்டா டிங்கி சாலையில் நிகழ்ந்தது. இதில் 25 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி, கடும் காயங்களுடன் உயரிழந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் தந் செங் லீ தெரிவித்தார்.

கூலாய் - யிலிருந்து கோட்டா டிங்கி - யை நோக்கி 75 வயது நபர் செலுத்திய Kia ரக காரில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மோதியதாக கூறப்படுகிறது.

சவப்பரிசோதனைக்கு ஏதுவாக அந்த நபரின் உடல், டெமெங்காங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →