ஷா ஆலாம், ஜூலை.19-
தனது வயது கிட்டத்தட்ட 100 ஐ எட்டினாலும், நாட்டிற்கும் இனத்திற்கும் தொடர்ந்து பங்களிப்பதாகவும், போராடுவதாகவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது. மலேசியாவின் மீதான தனது அன்பு ஒரு போதும் குறையாது என்றும், இது தனது சொந்த நாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.
இளம் தலைமுறையினர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற சிலரின் கருத்தை மறுத்த அவர், தான் மறைந்த பிறகு அவர்கள்தான் பொறுப்பேற்பார்கள் என்றார். தாம் உயிருடன் இருக்கும் வரை, நாட்டையும் இனத்தையும் பாதுகாக்க தனது ஆற்றலையும் அறிவையும் தொடர்ந்து அர்ப்பணிப்பேன் என்று மகாதீர் உறுதிப்படக் கூறினார்.








