புத்ராஜெயா, அக்டோபர்.24-
2025-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு எழுதுவோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் பட்சத்தில், உடனடியாக தங்களது பள்ளி அல்லது மாநிலக் கல்வித்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாநில எஸ்பிஎம் தேர்வுக் குழுவின் செயல்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டு, அவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் தேர்வு எழுதுவோர் மற்றும் அங்குள்ள பணியாளர்களின் பாதுகாப்பில் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளையில், இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வுகள் சீராக நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








