நாடு தழுவிய நிலையில் பள்ளிகளில் நடத்தப்பட்ட பாலஸ்தீன ஒருமைப்பட்டு வாரத்தின் மூலம் மாணவர்கள் மனதில் மற்றவர்களை நேசிக்க வேண்டும், மானுடத்தை போற்றி மதிக்க வேண்டும், மறந்தும் வெறுப்புணர்ச்சி கலாச்சாரத்தை தூண்டக்கூடாது என்ற நற்பண்புகளை விதைக்கப்பட்டுள்ளதாக ஒரு சாரர் கூறுகின்றனர்.
கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி இன்று அக்டோபர் 3 ஆம் தேதியுடன் பாலஸ்தீன ஒருமைப்பபாட்டு வாரம் முடிவுக்கு வருகிறது. இதனை ஒரு ஆயுத கலாச்சாரமாகவோ அல்லது மாணவர்களிடையே வெறுப்புணர்ச்சியை தூண்டக்கூடிய ஒரு நிகழ்வாகவோ அணுக வேண்டியதில்லை. பாலஸ்தீன மக்களின் துயரத்தை முன்நிறுத்தி,சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்ற பண்பு கூற்றை விதைக்கும் வாராமாக நோக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பு கூறுகிறது.








