Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தை மேலும் மேம்படுத்தத் திட்டங்கள் வரையப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தை மேலும் மேம்படுத்தத் திட்டங்கள் வரையப்பட்டுள்ளது

Share:

ஈப்போ, அக்டோபர்.17-

பேரா மாநிலத்தில் வரலாற்றுப்பூர்வ வர்த்தகத் தளமாக விளங்கும் ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தை மேம்படுத்தத் திட்டங்கள் வரையப்பட்டு வருவதாக பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.

லிட்டில் இந்தியாவை மேம்படுத்த அதன் முன்னாள் மேயர், டத்தோ ருமைஸி பஹாரின் டாவுட் பல திட்டங்களை வரைந்துள்ளார். அந்தத் திட்டங்களைத் தொடரும்படி புதிய மேயருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தீபாவளி திருநாளையொட்டி நேற்று இரவு ஈப்போ லிட்டில் இந்தியா வர்ததக வளாகத்திற்கு வருகை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.

லிட்டல் இந்தியா வளாகத்திற்கு உள்நாட்டு மறறும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

இங்கு வருகை புரியம் வருகையாளர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியில்லை மற்றும் பொது கழிப்பறை இல்லாத குறைபாடுகள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதையும் சிவநேசன் விளக்கினார்.

மேலும் லிட்டில் இந்தியா வளாகம் கெப்பாயாங் சட்டமன்றத் தொகுதிற்கு உட்பட்டுள்ளதால் அதன் சட்டமன்ற உறுப்பினராகவும், வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சராக இருக்கும் ங்கா கோர் மிங்கின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டு இருப்பதையும் சிவநேசன் சுட்டிக் காட்டினார்.

சிவநேசனின் ஈப்போ லிட்டில் இந்தியா வருகையின் போது, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் மற்றும் மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையா ஆகியோரும் உடன் இருந்தனர்.

Related News