Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சுல்தானுடன் பன்றியைத் தொடர்புபடுத்தும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் - சிலாங்கூர் எக்ஸ்கோ கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

சுல்தானுடன் பன்றியைத் தொடர்புபடுத்தும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் - சிலாங்கூர் எக்ஸ்கோ கடும் கண்டனம்

Share:

பன்றி ஒன்று அரச உடை அணிந்திருக்கும் வகையில், மாற்றியமைக்கப்பட்ட படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் நிங் ஸி ஹான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அந்தப் படம் சிலாங்கூர் சுல்தானைக் குறிக்கும் வகையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் இயக்கத்துறை குழுத் தலைவருமான நிங் ஸி ஹான், எந்த நபரையும் விலங்குடன் ஒப்பிடுவது மரியாதையற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய செயல்கள் பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், சமூக அமைதிக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சிலாங்கூரில் பன்றி வளர்ப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தத் திருத்தப்பட்ட படம் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்திற்குப் பொறுப்பான நபர் மீது சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு, கின்ராரா சட்டமன்ற உறுப்பினருமான நிங் ஸி ஹான் போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.

Related News