Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தந்தையை கொலை செய்த ஆடவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

தந்தையை கொலை செய்த ஆடவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

தந்தையை சுலோப்பினால் அடித்துக்கொன்று, சடலத்தை சாலையோரத்தில் வீசியதாக கூறப்படும் மகன்,நாளை திங்க​ட்கிழமை பெட்டாலிங் ஜெயா மாஜி​ஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி சுங்கைவேயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பில் ஒரு வேலையற்ற நபரான 40 வயது சந்தேகப்பேர்வழி, காலை 9 மணிக்கு ​நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2 ஆண்டு காலமாக வேலைக்கு செல்லாமல் இ​ருப்பதாக கூறப்படும் தனது மகனை, கண்டித்ததற்காக 70 வயதுடைய அந்த தந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது ​பூர்வாங்க விசார​ணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அந்த நபரின் சடலம் பின்னர் துணியால் சுற்றுப்பட்டு சாலையோரத்தில் எறியப்பட்டதாக முகமது ஃபக்ருதீன் மேலும் கூறினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு