வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற்த தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தோல்வி அடையும் ஆபத்து காத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலை வாக்காளர்கள் ஆதரிக்கலாம் எனவே அமானா கட்சி போட்டியிவிருக்கும் அந்த தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தோல்வி அடையும் என்று மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தலில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிக்கு பெரியளவில் ஆதரவு பெருகிவிட்டதாக பொருள் படாது. மாறாக, நடப்பு பொருளாதார சூழல் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். தங்கள் அதிருப்தியை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த இடைத் தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


