கோலாலம்பூர், அக்டோபர்.24-
பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு பள்ளி வளாகங்களில் போலீஸ் ரோந்துப் பணிகளை மேம்படுத்துமாறு போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் போலீஸ் ரோந்துப் பணிகள், உளவுத்தறையின் கண்காணிப்பு முதலியவை மேம்படுத்தப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி இதனைக் குறிப்பிட்டார்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் பள்ளி வளாகங்களில் போலீஸ் ரோந்து வாகனங்கள் ஒன்று முதல் ஐந்து நிமிடம் வரை நிறுத்தப்படும் என்பதையும் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.








