Oct 3, 2026
Thisaigal NewsYouTube

டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: "காஸாவுக்கு விடுதலை" என முழக்கமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: "காஸாவுக்கு விடுதலை" என முழக்கமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர், அக்டோபர்.26-

கோலாலம்பூரில் இன்று தொடங்கிய 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை டத்தாரான் மெர்டேக்காவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூடி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைதியான பேரணியில் பெரும்பாலானோர் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியும், இனப் படுகொலையை எதிர்த்தும் Free Palestin என முழக்கமிட்டனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தை அம்பாங் பார்க் பகுதியில் நடத்தத் திட்டமிட்டிருந்த போதும், காவற்படை அப்பகுதியை மூடியதால் வேறு வழியின்றித் தடையை மீறி டத்தாரான் மெர்டேக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆசியான் மாநாட்டின் 'சிவப்பு மண்டலத்துக்கு' அருகில் இந்தப் போராட்டம் நடந்ததால், அனுமதி மறுக்கப்பட்ட போதும், அமைதியான முறையில் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவுச் செய்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: "காஸாவுக்கு விடுதலை" என முழக... | Thisaigal News