கணவன் மனைவி சென்ற தொயோத்தா ஹைலக்ஸ் வாகனம், விபத்துக்குள்ளாகி தடம்புரண்டதில் இருவரும் காயத்துடன் உயிர்தப்பினர்.
இச்சம்பவம் இன்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 407.4ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூருக்கு அருகில் நிகழ்ந்தது. இதில் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட 30 வயது மதிக்கத்தக்க மாதுவை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்டையினர் கடுமையாக போராடிய வேளையில் சுமார் 20 நிமிடம் கடும் வலியினால் அந்த மாது பெரும் துயரத்திற்கு ஆளானதாக தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.








