Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இந்திய ஆடவர் வெட்டி கொலை
தற்போதைய செய்திகள்

இந்திய ஆடவர் வெட்டி கொலை

Share:

கூலிம், பிப்ரவ்ரி 26 -

கூலிம், பாடாங் செராய், தாமான் டாமாய் யில் உள்ள காபி கடையில் இந்திய ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1:20 மணியளவில் நிகழ்ந்திருப்பதாக கூலிம் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரின்டன்டன் சாபுவான் ம்.டி னோர் தெரிவித்தார்.

27 வயதுடைய அந்த லாரி ஓட்டுநரை இரு நபர்கள் கூர்மையான பாராங் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்டியிருப்பது கண்டறியப்பட்டதாக சாபுவான் ம்.டி கூறினார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவர் காபி கடையிலிருந்து வெளியே வருவதற்கு முற்பட்ட வேளையில் அவ்விருவரும் துரத்தி வந்ததாகவும், தப்பிக்க முயன்று திரும்பவும் அக்காபி கடையினுள் நுழைந்த போது ஆயுதங்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சாபுவான் ம்.டி.டி விவரித்தார்.

இன்று சவப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் சுல்தானா பாயிமா மருத்துவமனைக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்தார்.

Related News