சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வரும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக மாநகர் மன்றங்களும், ஊராட்சி மன்றங்களும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்று மசீச இளைஞர் பிரிவு துணைத் தலைவர் மைக் சொங் யு சுவான் நினைவுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுப்பதற்கும், அவர்களின் வியாபார உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கும் மாநகர் மன்றங்களும், ஊராட்சி மன்றங்களும் போதுமான அதிகாரத்தை கொண்டுள்ளன.
ஆனால், சட்டவிரோத அந்நிய வியாபாரிகளுக்கு எதிராக அவற்றின் அமலாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தும் என்று மைக் சொங் யு சுவான் குறிப்பிட்டார்.







