Oct 8, 2026
Thisaigal NewsYouTube

செனாய் விமான நிலையத்தில் குறைந்த பார்வைத்திறன் – 5 விமானங்கள் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செனாய் விமான நிலையத்தில் குறைந்த பார்வைத்திறன் – 5 விமானங்கள் பாதிப்பு

ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்ததால், இன்று வியாழக்கிழமை காலையில் 5 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், சில விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டதுடன், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டன என்றார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தமது விமானமும் காலை 6.45 மணிக்குப் புறப்பட வேண்டிய நிலையில், சுமார் ஒரு மணி 45 நிமிடங்கள் காத்திருந்த பின்னர் காலை 9 மணியளவில் செனாயை நோக்கிப் புறப்பட்டதாக அந்தோணி லோக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →